கபகரிச ரிச சதச...கபகரிச ரிச சதச
சரிகபகரி கபகரிசரிச...சரிகபகரி கபகரிசரிச
கபதபகபகரிசரிகபத...கபதபகபகரிசரிகபத
தபதபதப...கபதபதப...தபதபதப...கபதபதபசா...ஆ ஆ
நீலக்குயிலே உன்னோடு நான், பண்பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான், நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
உள்ளம்...பாமாலை...பாடுதே
அதிகாலை நான் பாடும் பூபாளமே..
ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு;
நாள்தோறும் நான் பாடும் தேவாரமே
நீங்காமல் நீ வந்து நெஞ்சை அள்ளு
ஆகாயம் பூமி ஆனந்த காட்சி
சந்தோஷம் பொங்க சங்கீதம் சாக்க்ஷி
திசைகளில் எழும் புது இசையமுதே வா வா
(நீலக்குயிலே)
நீர் கொண்டு போகின்ற கார்மேகமே,
தூரல்கள் நீ போட.. தாகம் தீரும்
நதி பாயும் அலையோசை ஸ்ருதி பாயவே
நானல்கள் கரையோரம் ராகம் பாடும்
மலர்க்கூட்டம் ஆடும் மலைச்சாரல் ஓரம்
பனிவாடை காற்று பல்லாண்டு பாடும்
செவிகளில் விழும் ஸ்வரலய சுகமே வா வா
(நீலக்குயிலே)
