Get Your Own Hindi Songs Player at Music Plugin
அடடா மழைடா.. அடை மழைடா
அழகா சிரிச்சா.. புயல் மழைடா.
(அடடா மழைடா)
மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ளே குடை பிடிக்க
கால்கள் நாலாச்சு.. கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு.. ஏதேதோ ஆயாச்சு
மயில் தோகை போலே.. இவ மழையில் ஆடும் போது
ரயில் தாளம் போலே.. என் மனசு வாடும் பாரு
என்னாச்சு எதாச்சு.. ஏதேதோ ஆயாச்சு
(அடடா மழைடா)
பாட்டு பாட்டு.. பாடாத பாட்டு
மழைதான் பாடுது, கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வெச்ச
மழைக்கொரு சலாம் போடு..
என்னை கொஞ்சம் காணலியே
உனக்குள்ளே தேடிப்பாரு..
மந்திரம் போலே இருக்கு
புது தந்திரம் போலே இருக்கு
பம்பரம் போலே எனக்கு
தலை மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே ..என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே..
உன்னை போல.. வேறாரும் இல்லே
என்ன விட்டா.. வேறாரு சொல்ல
சின்ன சின்ன கண்ணு ரெண்ட
கொடுத்தென்ன அனுப்பிவெச்சான்
இந்த கண்ணு போதலியே
எதுக்கு இவள படைச்சு வெச்சான்
பட்டாம்பூச்சி பொண்ணு
நெஞ்சு படபடக்கும் நின்னு..
பூவும் இவளும் ஒன்னு;
என்ன கொன்னுபுட்டா கொன்னு
போவது எங்கே.. நான் போவது எங்கே;
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே..
அடடா மழைடா.. அடை மழைடா
அழகா சிரிச்சா அனல் மழைடா
அடடா மழைடா ..அடை மழைடா
அழகா சிரிச்சா அனல் மழைடா
பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து கொட பிடிக்க
வானம் ரெண்டாச்சு.. பூமி துண்டாச்சு
என் மூச்சு காத்தாலே ..மழை கூட சூடாச்சு
இடிய நீட்டி யாரும்.. இந்த மழையே கலைக்க வேணாம்..
மழைய பூட்டி யாரும்.. என் மனச அடைக்க வேணாம்
கொண்டாடு கொண்டாடு.. கூத்தாடி கொண்டாடு..

4 comments:
kettadhu illai
வாங்க எல்.கே,
ரொம்ப பிரபலமான பாட்டு இது.
நன்றி.
எனக்கும் பிடிச்சிருக்கு.
Thank u asia :-))
Post a Comment