கண்ணே..கலைமானே..
கண்ணே கலைமானே
கன்னிமயிலென கண்டேன் உனை நானே..(2)
அந்திபகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்..

ஆரிராரோ.. ஓ ராரிரோ..
ராரிராரோ.. ஓ ராரிரோ..

கண்ணே கலைமானே
கன்னிமயிலென கண்டேன் உனை நானே..

ஊமை என்றால் அதிலொரு அமைதி..
ஏழை என்றால் அதிலொரு அமைதி..
நீயோ கிளிப்பேடு..
பண்பாடும் ஆனந்தக்குயில் பேடு..

ஏனோ தெய்வம் சதிசெய்தது..
பேதைபோல விதி செய்தது..
(கண்ணே கலைமானே)

காதல் கொண்டேன்.. கனவினை வளர்த்தேன்..
கண்மணி உனை நான்.. கருத்தினில் நிறைத்தேன்.
உனக்கே உயிரானேன்..
எந்நாளும் எனை நீ மறவாதே..
நீயில்லாமல் எது நிம்மதி..
நீதானே என் சந்நிதி..
(கண்ணே கலைமானே)


0 comments:

 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates