நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை(வாரணம் ஆயிரம்)

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை...


நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை...


ஓ ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை.. உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய்.. எனைத்தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி.
(நெஞ்சுக்குள்)


ஏதோ ஒன்று.. என்னை ஈர்க்க
மூக்கின் நுனி.. மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகன்வில்லா...


நீ நின்ற இடமென்றால்
விலை ஏறிப் போகாதோ..
நீ செல்லும் வழியெல்லாம்
பனிக்கட்டி ஆகாதோ..


என்னோடு வா.. வீடு வரைக்கும்
என் வீட்டைப் பார்.. என்னைப் பிடிக்கும்


இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால்.. நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால்.. நெஞ்சே போகாதே… போகாதே…


தூக்கங்களை தூக்கிச் சென்றாய்
ஏக்கங்களை தூவிச் சென்றாய்..
உன்னைத் தாண்டிப் போகும்போது
வீசும் காற்றின் வீச்சு வேறு.


நில்லென்று நீ சொன்னால்
என் காலம் நகராதே
நீ சூடும் பூவெல்லாம்..
ஒரு போதும் உதிராதே.


காதல் எனைக் கேட்கவில்லை..
கேட்டால் அது.. காதல் இல்லை.


என் ஜீவன் ஜீவன் நீதானே
எனத் தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம்... தாங்காதே.
(நெஞ்சுக்குள்)


1 comments:

Kousalya said...

one of the best fav song....thank u for sharing...

 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates