மார்கழிப்பூவே மார்கழிப்பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்..
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை,
உன்மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை.
(மார்கழி)
பூக்களைப்பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல்போல் குதிப்பேன்..
நான்மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக்கடையில் தேனீர் குடிப்பேன்..
வாழ்க்கையின் ஒருபாதி நான் இங்கு வசிப்பேன்
வாழ்க்கையின் மறுபாதி நான் எங்கு ரசிப்பேன்.
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்..
(மார்கழி)
வெண்பா பாடிவரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் செம்பூக்கள்
கொஞ்சம்.. பாடவரும் பெண்ணுக்கு
சந்தம்.. தந்துவிடும் மைனாக்கள்..
காவேரி கரையில் நடந்ததுமில்லை..
கடற்கரை வெளியில் கால்வைத்ததில்லை..
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச்சுட மழையில் நனைந்ததுமில்லை..
சாலையில் நானாக போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை.
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை..
(மார்கழி)

1 comments:
வணக்கம் நண்பரே தங்களின் பதிவை வலைச்சரத்தில் பதித்துள்ளேன்
நன்றி
http://blogintamil.blogspot.in/2012/03/blog-post_04.html
Post a Comment