கொடியிலே (கடலோரக்கவிதைகள்)

கொடியிலே மல்லிகைப்பூ.. மணக்குதே மானே..
எடுக்கவா தொடுக்கவா, துடிக்கிறேன் நானே;
பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழ மல்லி தோட்டம்..
நெருங்க விடவில்லையே.. நெஞ்சுக்குள்ள கூச்சம்..
(கொடியிலே மல்லிகைப்பூ)


மனசு தடுமாறும்,, அது நினைச்சா நெறம் மாறும்
மயக்கம் இருந்தாலும், ஒரு தயக்கம் தடை போடும்..
நித்தம் நித்தம் உன் நினைப்பு நெஞ்சுக்குழி காயும்..
மாடு ரெண்டு, பாதை ரெண்டு.. வண்டி எங்கே சேரும்!!
பொத்திவச்சா அன்பு இல்ல.. சொல்லிப்புட்டா வம்பு இல்ல..
சொல்லத்தானே தெம்பு இல்ல.. இன்ப துன்பம் யாரால..
(கொடியிலே மல்லிகை பூ)


பறக்கும் திசை ஏது.. இந்த பறவை அறியாது..
உலகம் தெரியாது.. அது உனக்கும் புரியாது..
பாறயிலே பூமுளைச்சி பாத்தவங்க யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு..
காலம் வரும் வேளையிலே, காத்திருப்பேன் பொன்மயிலே..
தேரு வரும் உண்மையிலே, சேதி சொல்வேன் கண்ணாலே..
(கொடியிலே மல்லிகைப்பூ)3 comments:

LK said...

ennap paadalgalil moolgiyaachaa?

ஜோதிஜி said...

ஒரு காலத்தில் இந்த பாடல் ஒலிக்கும் இடத்தில் அப்படியே நின்று முடியும் வரை கேட்டு விட்டு நகர்ந்த நாட்கள் இப்போது நினைவுக்கு வருகிறது.

மாய உலகம் said...

ஆஹா மனதை வருடும் மென்மையான பாடல்

 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates