உயிரிலே(வெள்ளித்திரை)
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாயே இது காதல் சாபமா ?
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஒடமா ?
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி


கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கண்களிலே தூவிவிட்டாய் மண்துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா ?
இனி தீயே வைத்து எரிந்தாலும் என் நெஞ்சம் வேகுமா ?
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உயிருடன் சாகிறேன் பாரடி


கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே
இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா ?
நான் விழுந்தாலும் மீண்டும் எழ ?
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல ?
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும்
பழுதான தேரடி
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
6 comments:

Balaji saravana said...

மிகப் பிடித்த பாடல்களுள் ஒன்று..
பதிவிற்கு நன்றி சாரல்..:)

Kousalya said...

nice one too....

சௌந்தர் said...

நல்ல பாட்டு எனக்கும் பிடிக்கும்

Priya said...

எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்! அழகான அற்புதமான வரிகள்!

மாய உலகம் said...

காதலின் பிரிவின் வலியை உணர்த்தும் பாடல்

அமைதிச்சாரல் said...

பாடலை ரசிச்ச அனைவருக்கும் நன்றி..

 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates