அடி.. ஆத்தாடி (கடலோரக்கவிதைகள்)

அடி ஆத்தாடி.. இள மனசொண்ணு ரெக்ககட்டி, பறக்குது சரிதானா.. 
அடி அம்மாடி.. ஒரு அலவந்து மனசுல அடிக்குது ,அதுதானா 
உயிரோடு உறவாடும்.. ஒரு கோடி ஆனந்தம் 
இவன் மேகம் ஆக யாரோ காரணம்.. 
(அடி ஆத்தாடி) 


மேல போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ.. 
ஒன்னப்பார்த்து அலைகள் எல்லாம் மெட்டுக் கட்டி பாடாதோ 
இப்படி நான் ஆனதில்ல.. புத்தி மாறிப் போனதில்ல. 
முன்ன பின்ன நேர்ந்ததில்ல.. மூக்குநுனி வேர்த்ததில்ல. 
கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள கத்திச்சண்ட கண்டாயோ.. 
படபடக்கும் நெஞ்சுக்குள்ள.. பட்டாம்பூச்சி பார்த்தாயோ. 
எச கேட்டாயோ..
(அடி ஆத்தாடி) 


தாகப்பட்ட நெஞ்சுக்குள்ளே ஏகப்பட்ட சந்தோசம் ..
உண்ம சொல்லு பொண்ணே.. என்னெ என்ன செய்ய உத்தேசம் 
வார்த்த ஒண்ணு வாய்வரைக்கும், வந்துவந்து போவதென்ன 
கட்டுமரம் பூப்பூக்க, ஆசப்பட்டு ஆவதென்ன 
கட்டுத்தறி காள நானே, கன்னுக்குட்டி ஆனேனே.. 
தொட்டுத்தொட்டு தென்றல் பேச, தூக்கங்கெட்டுப் போனேனே.. 
சொல் பொன்மானே..
(அடி ஆத்தாடி)0 comments:

 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates