செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்.. என் மீது மோதுதம்மா (2)
பூவாசம் மேடை போடுதம்மா.. பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம் (2)
வளைந்து நெளிந்து போகும் பாதை, மங்கை மோகக் கூந்தலோ;
மயங்கி மயங்கிச் செல்லும் வெள்ளம்.. பருவ நாண ஊடலோ.
ஆலங்கொடி மேலே கிளி, தேன் கனிகளைத் தேடுது..
ஆசைக்குயில் பாஷையின்றி ராகம் என்ன பாடுது..
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
(செந்தாழம்பூவில்)
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப்போகிறாள்;
ஜரிகை நெளியும் சேலை கொண்டு, மலையை மூடப் பார்க்கிறாள்..
பள்ளம் சிலர்.. உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத்தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்;
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
(செந்தாழம்பூவில்)
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை;
இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை..
ஓடை தரும் வாடைக்காற்று வானுலகைக் காட்டுது;
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக்கூட்டுது..
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி
(செந்தாழம்பூவில்)(2)
அம்மம்மா ஆனந்தம்..
அம்மம்மா ஆனந்தம்.

8 comments:
KJvin kuralil oru aanantham inthap paadal.. pagirvukku nandri sago
”பட்டம் தரத்தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்;
மலையின் காட்சி இறைவன் ஆட்சி”
என்று இயற்கை அழகில் தன் மனதைப் பறிகொடுத்து அதைப் படைத்த இறைவனைப் புகழ்கின்றது இக்கவிதை. முழுக்கமுழுக்க இயறகை பற்றிய கவிதையில்:
‘பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்ட்வன்?”
இந்த வரி தேவையா?
அச்சே என்ன பாட்டு என்னே மியூசிக்..
//அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப்போகிறாள்;
ஜரிகை நெளியும் சேலை கொண்டு, மலையை மூடப் பார்க்கிறாள்..//
எவ்வளவு அழகான வரிகள்!!
அருமையான பாடல்.
வாங்க எல்.கே,
மென்மையான ஜேசுதாசின் குரல் நிச்சயமாக இந்தப்பாட்டுக்கு இனிமை சேர்க்குது..
நன்றி.
வாங்க அஹமது,
இளையராஜாவின் இசைவாழ்க்கையில் இது ஒரு மைல்கல்..
நன்றி.
வாங்க J.A.R.F.
இதை எழுதினவர்கிட்டதான் கேக்கணும்..
நன்றி வரவுக்கு.
வாங்க சுந்தரா,
ரெண்டு ஜாம்பவான்களும் இணைந்து நமக்கு நல்ல விருந்து படைச்சிருக்காங்க..
நன்றி.
Post a Comment