குறை ஒன்றும் இல்லை...


குறையொன்றும் இல்லை, மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றும் இல்லை கண்ணா..
குறையொன்றும் இல்லை கோவிந்தா..
(குறையொன்றும் இல்லை)

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா..
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் ... எனக்கு
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா..

வேண்டியதை தந்திட வேங்கடேசன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா..
மணிவண்ணா.. மலையப்பா.. கோவிந்தா.. கோவிந்தா..
கோவிந்தா.. கோவிந்தா..

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா..
கண்ணா.. திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா..
உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்..
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா..
உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா..
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா..

குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா..
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா..
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா..
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா..
மணிவண்ணா.. மலையப்பா.. கோவிந்தா.. கோவிந்தா..
கோவிந்தா..கோவிந்தா..

கலினாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோயிலில் நிற்கிறாய் கேசவா
கலினாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோயிலில் நிற்கிறாய் கேசவா..
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா..
யாதும் மறுக்காத மலையப்பா..
யாதும் மறுக்காத மலையப்பா.. உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைகடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
எந்நாளும் இருந்திட ஏது குறை எனக்கு..
ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா.
ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா..
மணிவண்ணா.. மலையப்பா..கோவிந்தா.. கோவிந்தா..
கோவிந்தா.. கோவிந்தா..

2 comments:

LK said...

arumai saaral.. continue pannunga

அமைதிச்சாரல் said...

வாங்க எல்.கே,

நன்றிப்பா. ரசிச்ச எல்லாவிதமான பாடல்களையும் சேமிக்கலாம்ன்னு ஒரு ஆசை அதான்.

 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates