நீலக்குயிலே உன்னோடு (மகுடி)
கபகரிச ரிச சதச...கபகரிச ரிச சதச
சரிகபகரி கபகரிசரிச...சரிகபகரி கபகரிசரிச
கபதபகபகரிசரிகபத...கபதபகபகரிசரிகபத
தபதபதப...கபதபதப...தபதபதப...கபதபதபசா...ஆ ஆ


நீலக்குயிலே உன்னோடு நான், பண்பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான், நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
உள்ளம்...பாமாலை...பாடுதே


அதிகாலை நான் பாடும் பூபாளமே..
ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு;
நாள்தோறும் நான் பாடும் தேவாரமே
நீங்காமல் நீ வந்து நெஞ்சை அள்ளு
ஆகாயம் பூமி ஆனந்த காட்சி
சந்தோஷம் பொங்க சங்கீதம் சாக்க்ஷி
திசைகளில் எழும் புது இசையமுதே வா வா


(நீலக்குயிலே)


நீர் கொண்டு போகின்ற கார்மேகமே,
தூரல்கள் நீ போட..  தாகம் தீரும்
நதி பாயும் அலையோசை ஸ்ருதி பாயவே
நானல்கள் கரையோரம் ராகம் பாடும்
மலர்க்கூட்டம் ஆடும் மலைச்சாரல் ஓரம்
பனிவாடை காற்று பல்லாண்டு பாடும்
செவிகளில் விழும் ஸ்வரலய சுகமே வா வா


(நீலக்குயிலே)
7 comments:

மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

LK said...

பகிர்வுக்கு நன்றி ?? என்ன ஆணி ஜாஸ்தியா ??

அன்புடன் மலிக்கா said...

பகிர்வு அருமை..

ஸ்ரீராம். said...

எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.

ரிஷபன் said...

இசைக்குத்தான் எத்தனை சக்தி.. நன்றி..

வைகறை said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


-கவிஞர்.வைகறை
&
"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com

அமைதிச்சாரல் said...

கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates