வலியே.. என் உயிர்வலியே (தாம் தூம்)
ஆண்: வலியே என் உயிர் வலியே

       நீ உலவுகிறாய் என் விழி வழியே

       சகியே என் இளம் சகியே

       உன் நினைவுகளால் நீ துரத்துறியே

       மதியே என் முழு மதியே

       வெண் பகல் இரவாய் நீ படுத்துறியே

       நதியே என் இளம் நதியே

       உன் அலைகளினால் நீ உரசுறியே

பெண்: யாரோ... மனதிலே... ஏனோ... கனவிலே...

       நீயா... உயிரிலே... தீயா... தெரியவே...

       காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ

       மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமையாகின்றதோ(வலியே...)பெண்: மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் மாறுதே

       தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே

       அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்

       நீயா...

ஆண்: முழுமையாய்

பெண்: நானா...

ஆண்: வெறுமையாய்

பெண்: நாமா... இனி சேர்வோமா... (யாரோ... மனதிலே...)பெண்: மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்ததும் உன் கண்கள் தான்

       மிருதுவாய் பேசியே என்னுள் வசித்ததும் பார்த்தே தான்
  
       கண்களைக் காணவே இமைகளே மறுப்பதா 

       வெந்நீர்...

குழு:  பெண்ணிலா

பெண்: கண்ணீர்...

குழு:  கண்ணிலா...

பெண்: நானும்... வெறும் கானலா... 


பெண்: யாரோ...

குழு:  யாரோ...

பெண்: மனதிலே... ஏனோ...

குழு:  ஏனோ...

பெண்: கனவிலே...

பெண்: ஓ... நீயா...

குழு:  ஓ... நீயா...

பெண்: உயிரிலே.. தீயா..

குழு:  தீயா...

பெண்: தெரியவே... 

       காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ
  
       மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ (வலியே ...)3 comments:

மாய உலகம் said...

nice

மாய உலகம் said...

பாடலின் முதல் வரியே.. அசத்தல்

ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.. வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_19.html?showComment=1392782733232#c461818290231042950

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates