அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை..
ஆனால்.. அது ஒரு குறையில்லை.
(அவள்)
அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப்படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை..
இருந்தும் கவனிக்க மறுக்கவில்லை.
(அவள்)
அவள் நாய்க்குட்டி எதுவும் ..வளர்க்கவில்லை
யார் காவலிருந்தால் ..தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து... உறங்கவில்லை
நான் பொம்மை போலவே பிறக்கவில்லை.
அவள் கண்கள் என்றும் ஈரமில்லை
அந்தக் காட்டில் தொலைந்தேன் தீரவில்லை
அவள் கண்கள் நோக தாங்கவில்லை
கை பிடித்திடும் ஆசை.. தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை.
எனக்கு எதுவுமில்லை.
(அவள்)
அவள் பட்டுப்புடவை என்றும்.. அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் ..சிறந்ததில்லை
அவள் திட்டும் போது வலிக்கவில்லை
அந்த அக்கறை போலே வேறு இல்லை..
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவளில்லாமல் சுவாசமில்லை
அவள் சொந்தபந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை...
எனக்கு எதுவுமில்லை.
(அவள்)
7 comments:
nice song
நல்ல பாட்டு நன்றி
thanks for sharing
வாங்க எல்.கே,
நன்றி.
வாங்க சௌந்தர்,
ரசித்ததுக்கு நன்றி.
வாங்க சந்தனமுல்லை,
வருகைக்கு நன்றி.
நல்ல பாட்டு
மிக ரசித்தேன்
Post a Comment