Showing posts with label ரூப்குமார். Show all posts
Showing posts with label ரூப்குமார். Show all posts

பூக்கள் பூக்கும் தருணம் (மதராஸப்பட்டினம்..)




ஆ: பூக்கள் பூக்கும் தருணம்,..

   ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே..

பெ: புலரும் காலைப்பொழுதை,
    முழு மதியும் பிரிந்து போவதில்லையே…

ஆ: நேற்றுவரை நேரம் போகவில்லையே,
    உனதருகே நேரம் போதவில்லையே..

பெ: எதுவும் பேசவில்லையே.. இன்று ஏனோ
    எதுவும் தோன்றவில்லையே….  இது எதுவோ

ஆ: இரவும் விடியவில்லையே,
    அது விடிந்தால் பகலும் முடியவில்லையே …
    பூந்தளிரே…

ஆ: வார்த்தை தேவையில்லை 
    வாழும் காலம் வரை ,
    பாவை பார்வை,.. மொழி பேசுமே..

பெ: நேற்று தேவை இல்லை,.. 
    நாளை தேவையில்லை,.. இன்று இந்த நொடி போதுமே

ஆ: வேரின்றி விதியின்றி 
    விண் தூவும் மழை இன்றி
    இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே..

பெ: வாள் இன்றி போர் இன்றி
    வலிக்கின்ற யுத்தம் இன்றி
    இது என்ன இவனுக்குள், எனை வெல்லுதே..

ஆ: இதயம் முழுதும் இருக்கும்
    இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்..
  
பெ: இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
    அது கிடைத்தால், .. சொல்ல வேண்டும் எனக்கும்

ஆ: பூந்தளிரே..

 பெ: ohho where would I be
          without this joy inside of me
          it makes me want..  to come alive
          it makes me want to fly
          into the sky...
         ohho where would I be
          if I didn't have you next to me
          ohho where would I be
         ohho where... ohho where... 

ஆ: எந்த மேகம் இது,.. எந்தன் வாசல் வந்து
    எங்கும் ஈரமழை தூவுதே..

பெ: என்ன உறவு இது .. எதுவும் புரியவில்லை
    என்ற போதும் இது நீளுதே!!..

ஆ: யார் என்று அறியாமல்,.. பேர் கூட தெரியாமல்,
    இவனோடு ஒரு சொந்தம் உருவானதே..

பெ: ஏன் என்று கேட்காமல்,.. தடுத்தாளும் நிற்காமல்
    இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே

ஆ: பாதை முடிந்த பிறகும் இந்த உலகில்,
    பயணம் முடிவதில்லையே,,

பெ: காற்றில் பறந்தே,.. பறவை மறைந்த பிறகும்..

இ: இலை தொடங்கும் 
   நடனம் முடிவதில்லையே

பெ: இது எதுவோ… (பூக்கள்)




 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates