ஒரு கணம்(நாடோடித்தென்றல்)





ஒரு கணம் ஒரு யுகமாக,.. ஏன் தோன்ற வேண்டுமோ..
தினம்தினம் உனை எதிர்பார்த்து,.. மனம் ஏங்க வேண்டுமோ..(2)


தென்றலும் உனைப்பாடுதே..
வெண்மதி உனைத்தேடுதே..
இது காதல் ராகமே..
புரியாத மோகமே 
(ஒரு கணம்)


வான்மீது விண்மீன்கள் வேடிக்கை பார்க்கின்றதே..
உன் தூது.. வாராமல் நெஞ்சுக்குள் வேர்க்கின்றதே..
நெஞ்சுக்குள் நீ போட்ட மூக்குத்தி மின்னல்களே..
பஞ்சுக்குள் உன் காதல் எண்ணத்தின் பின்னல்களே..
இது காதல் ராகமே..
புரியாத மோகமே..




ஒரு கணம் ஒரு யுகமாக,.. ஏன் தோன்ற வேண்டுமோ..
வானமும் பூந்தென்றலும்,.. வாழ்த்துதே மலர்தூவுதே..
இது காதல் ராகமே
புரியாத மோகமே..


மேகத்தில் ஈரம்போல்,.. கண்ணுக்குள் நீரேனம்மா..
பூமிக்குள் வைரம்போல்,.. நெஞ்சத்தில் நீதானம்மா..
சோகங்கள் சொல்லாமல் ,ஓடட்டும் காதல்பெண்ணே..
சொந்தங்கள் போகாமல், கூடட்டும் ஊடல்பெண்ணே..
இது காதல்ராகமே..
புரியாத மோகமே..


ஒரு கணம் ஒரு யுகமாக.. ஏன் தோன்ற வேண்டுமோ..
தினம்தினம் உனை எதிர்பார்த்து,.. மனம் ஏங்க வேண்டுமோ..


வானமும் பூந்தென்றலும்,.. வாழ்த்துதே மலர்தூவுதே..


இது காதல் ராகமே..
புரியாத மோகமே..
(ஒரு கணம்)









6 comments:

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Super song...thanks for sharing...:)

Priya said...

Nice song!

மாய உலகம் said...

இளைய ராஜாவின் இசையில் வாய்சில் அற்புதம்....

மாய உலகம் said...

//ஒரு கணம் ஒரு யுகமாக,.. ஏன் தோன்ற வேண்டுமோ..
தினம்தினம் உனை எதிர்பார்த்து,.. மனம் ஏங்க வேண்டுமோ..(2)//


பாடலின் தொடக்கம் சில நாட்களை சோகத்துடன் ஞாபகபடுத்துகிறது..

சாந்தி மாரியப்பன் said...

கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி.

முனைவர் இரா.குணசீலன் said...

எனக்குப் பிடித்த பாடல்.

 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates